மத்திய பிரதேச அமைச்சர் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!
மத்திய பிரதேசத்தின் அமைச்சர் மற்றும் மனைவிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் அருகிலிருந்தவர்கள் அனைவரையும் சுய தனிமைப்படுத்துதல் செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர்.
மத்திய பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் துளசி ராம் சில்வாத் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எந்த அறிகுறிகளும் தென்படாவிட்டாலும் சந்தேகத்தின் பேரில் செய்த பரிசோதனையில் கொரோனா இவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் துளசிராம் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது என் அன்பான நாட்டு மக்களே, எனக்கு கொரானா தோற்று உள்ளது என்பது சோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எனது சக ஊழியர்கள் கொரானா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் அருகில் வந்தவர்கள் சுய தனிமைப்படுத்துதல் செய்துகொள்ளுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் துளசி ராம். இதோ அந்த பதிவு,
कोई लक्षण ना होने पर भी मुख्यमंत्रीजी के निर्देश पर मैंने #COVID टेस्ट करवाया था।मेरी और मेरी धर्मपत्नी की रिपोर्ट पॉज़िटिव आई है।मुझे विश्वास है आप सबकी शुभ कामनाओं से हम कोरोना को हराएंगे और फिर उसी संकल्प से कार्यक्षेत्र में उतरेंगे।मेरे साथियों से आग्रह है वे भी टेस्ट करवाए।
— Tulsi Ram Silawat (@tulsi_silawat) July 28, 2020