பா.ஜா.க தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
பீகார் பட்னாவிலுள்ள 75 பாஜாக தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை சற்றும் குறையாமல் காட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் யாரையும் விட்டு வைப்பதாக இல்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் பிராந்திய கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜா.க கட்சி தலைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நிறுவன பொதுச் செயலாளர் நாகேந்திரா மற்றும் மாநில பொதுச் செயலாளர் தேவேஷ்குமார், கட்சி மாநில துணைத் தலைவர் ராஜேஷ் வர்மா, முன்னாள் எம்.எல்.சி ராதா மோகன் சர்மா ஆகியோரும் பதிக்கப்பட்டுள்ளனர்.