கும்பமேளாவில் கலந்து கொண்டு கங்கையில் நீராடிய 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!
கும்பமேளாவில் கலந்து கொண்டு கங்கையில் நீராடிய 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரின்ல்,12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால், இந்த நிகழ்வை ரத்து செய்யுமாறு பல தரப்பினரும் கூறி வந்தனர். ஆனால், கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்வு நடைபெறும் என்று உத்தரகாண்ட் அரசு அறிவித்தது.
இந்த நிகழ்விற்கு வரும் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அங்கு கூட்டம் கூடியதால், இந்த கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், கடந்த 2 நாட்களில் மட்டும் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நடைபெற்ற பகுதியில், நாளொன்றுக்கு 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.