#Breaking:மக்களே கவலை வேண்டாம்…1000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 913 பேருக்கு கொரோனா பாதிப்பு;13 பேர் பலி.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 913 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 1,096 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 913 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,29,044 ஆக பதிவாகியுள்ளது.
குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்:
அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,316 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,24,95,089 ஆக அதிகரித்துள்ள நிலையில்,கொரோனாவுக்கு 13 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,21,358 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா சிகிச்சை:
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,597 ஆக குறைந்துள்ளது.
தடுப்பூசி எண்ணிக்கை:
மேலும், நாட்டில் இதுவரை 1,84,70,83,279 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரேநாளில் 2,84,073 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.