கொரோனா அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.
நாட்டில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் படிப்படியாக சற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்து, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லி, உத்ரபிரேதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த சமயத்தில், நேற்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டார்.
மேலும், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை பெற்ற வெற்றிகளை இழக்காமல், நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது என கூறினார். இந்த நிலையில், கொரோனா அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யவும், விரைந்து கொரோனா தடுப்பூசிகளை செலுத்தவும் அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் பூஷனின் கடிதத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிரா கூடுதல் செயலாளர் (சுகாதாரம்) பிரதீப் வியாஸ் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ரயில்கள், பேருந்துகள், திரையரங்குகள், ஆடிட்டோரியம், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…