கொரோனா அதிகரிப்பை கருத்தில் கொண்டு உத்திரப்பிரதேசத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் அவ்வப்போது மீண்டும் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, கொரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்றுவதை பெரும்பாலான மக்கள் கைவிட்டு விட்டனர்.
இந்த நிலையில், கொரோனா அதிகரிப்பை கருத்தில் கொண்டு உத்திரப்பிரதேசத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத், லக்னோ, மீரட், கௌதம் புத்தர் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…