இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2300-ஐ தாண்டியது.!
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2069ஆக இருந்து வந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 2301-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 157 பேர் குணமடைந்து வீட்டிற்க்கு திரும்பியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் செய்தியாக பார்க்கப்படுகிறது. இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.