இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் பரவல் சமுகப்பரவலாக மாறவில்லை.. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!
இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 24,879 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கபட்ட நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7.69 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதில் 21,144 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,76,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று, சமூக பரவலாக மாறவில்லை என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை எனவும், சில இடங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறியதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.