இந்தியாவில் இரண்டாவது நாளாக 11,000 தாண்டிய கொரோனா பாதிப்பு.!

இந்தியாவில், இரண்டாவது நாளாக கடந்த 24 மணிநேரத்தில் 11,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,993 லிருந்து 3,20,922 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330 லிருந்து 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884 லிருந்து 9,195 ஆக அதிகரிப்பு என மத்திய சுகதரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், 311 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 42 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.
இந்தியாவில் இரண்டாவது நாளாக கடந்த 24 மணிநேரத்தில் 11,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.