இந்தியாவில் 90 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு?
இந்தியாவில் இதுவரை மொத்தமாக 90 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்து கொண்டு செல்கின்றது என்று கூறினாலும், இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் மொத்தமாக 9,050,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,32,764 பேர் உயிரிழந்துள்ளனர், 84,75,897 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர் என்றே கூறலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் 46,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 562 பேர் உயிரிழந்துள்ளனர்.4,41,952 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இன்றி தூய்மையான மற்றும் ஆரோக்கியமான நாடாக மாற வேண்டுமானால் நாம் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து முக கவசம் அணிவது வழக்கப்படுத்திக் கொள்வோம். கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.