இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு?

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கில் புதிதாக ஏற்பட்ட பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலக நாடுகளில் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என்று கூறலாம். தினமும் 80 முதல் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த இடத்தில், தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 54,265 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 710பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 7,173,565 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 109,894 பேர் உயிரிழந்துள்ளனர், 6,224,792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 838,879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025