மஹாராஷ்டிராவில் 18000ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம், இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் புதிதாய் 1216 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 17,974 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
மேலும், அம்மாநிலத்தில் வைரஸ் தோற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 3,301 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.