கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 71,000-ஐ கடந்தது..இன்று முதல் ஊரடங்கு கிடையாது – எடியூரப்பா
கர்நாடகாவில் இன்று ஒரே 3,649 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,061 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 4,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,652 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,464 அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1,664 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 25,459 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 44,140 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் பிறப்பிக்கப்ட ஊரடங்கு இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்தது இதனால், பெங்களூரில் உள்ளவர்கள் மத்தியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. எனவே நேற்று மாலை 5 மணிக்கு எடியூரப்பா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் கூறுகையில், கர்நாடகாவில் இன்று முதல் ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். கொரோனாவை தடுக்க ஊரடங்கு கை கொடுக்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும். கொரோனா பரவலை தடுக்க மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.