இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது .மூன்றாவது முறையாக ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தினமும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது .
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது .இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,152லிருந்து 70,756 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206லிருந்து 2,293ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917லிருந்து 22,455 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 23,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் 868 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,4,786 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…