இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது .மூன்றாவது முறையாக ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தினமும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது .
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,952 லிருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,783 லிருந்து 1,886 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 15,267 லிருந்து 16,540 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 17,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 694 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,3301 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…