உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் , உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,202,242 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 64,729 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 246,638 பேர் குணமடைந்துள்ளார்கள். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் என்ற மாநிலம் என்றால் அது மஹாராஷ்டிரா தான், இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 490 பேரும் , உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.
கொரோனாவால் இந்த மாநிலம் போல வேறு இந்த மாநிலமும் அதிகம் உயிரிழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…