கொரோனா பாதிப்பு எதிரொலி ! இன்றுமுதல் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை மட்டும் அல்லாது உலகில் உள்ள பல நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது வரை 30-பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு இன்று முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.