நாடு முழுவதும் 46,711 பேருக்கு கொரோனா பாதிப்பு.! 1,583 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,711 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் தினமும் கொரோனா தொடர்பான  நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,711 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,583 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட 46,711 பேரில் இதுவரை 13,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் 1,020 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,541 பேர் பாதிக்கப்பட்டு, 583 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 5804, டெல்லியில் 4898, தமிழ்நாட்டில் 3550, ராஜஸ்தானில் 3061, மத்திய பிரதேசத்தில் 3049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

9 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

21 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

33 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

39 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

55 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago