கேரளாவில் மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதி..மொத்த எண்ணிக்கை 2,322ஆக உயர்வு.!
இன்று கேரளாவில் மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை2,623 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு நன்கு செயல்பட்டு வந்தது. தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று கேரளாவில் மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,322ஆக உயர்ந்துள்ளது.
மேலும்,60 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 1,234 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது வரையில் 1336 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.