இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 38,902 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 10,77,618 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், 10,77,618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,26,816 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 67,7423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரையில், மகாராஷ்டிரா மாநிலம் இந்த வைரஸ் பாதிப்பில் முதலிடத்திலும் , தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. மகாராஸ்டிராவில் 3,00,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 1,65,714பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.