மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா உறுதி – மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

மராட்டியத்தில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. இந்த வைரசுக்கு எதிராக அரசாங்கமும் அதிகாரிகளும் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக முன்னின்று போராடக்கூடிய காவல்துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கு தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் 120 போலீசாருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆட்கொல்லி நோய்க்கு மேலும் ஒரு காவலரும் உயிரிழந்துள்ளார், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது. 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் மட்டும் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025