பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு ஒரே மாதத்தில் கேரளாவில் 262 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!
கடந்த மாதம் 1-ஆம் தேதி தான் கேரளாவில் பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்ட நிலையில், அதற்குள் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இருப்பினும் கொரோனாவின் வீரியம் சற்றே குறைந்து உள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிக் கூடங்களைஅரசாங்கம் திறந்துள்ளது. அதன்படி கேரளாவில் கடந்த மாதம் 1ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே மாதத்தில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மரமஞ்செடி மற்றும் வன்னேரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள 262 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்ளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மரமஞ்சரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 148 மாணவர்களுக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 39 ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அது போல இந்த பள்ளிக்கு 6 கிலோ மீட்டர் அருகில் உள்ள வன்னேரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 39 மாணவர்கள் மற்றும் 36 ஆசிரியர்களுக்கு கொரோனா ஏற்பட்டுளளது உறுதி செய்யப்பட்டுள்ளது.