கொரோனா நிதி தமிழகத்திற்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு
கொரோனா பரவலை கருத்தில்கொண்டு தமிழகத்திற்கு ரூ.533 கோடி ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் கொரோனா நிதியாக தமிழகத்திற்கு ரூ.533 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 15வது நிதி குழுவின் பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு முதற்கட்டமாக நிதி ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ.1,441.6 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அடுத்தபடியாக மகாராஷ்டிரா – ரூ.861.4 கோடி, பீகார் – ரூ.741.8 கோடி, மேற்குவங்கம் – ரூ.652.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.