பணியிலிருந்த குடியசுத்தலைவர் மாளிகை ஊழியருக்கு கொரோனா!
டெல்லியிலுள்ள குடியரசு மாளிகையில் பணியிலிருந்த உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சோதனை செய்துள்ளனர். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.