எம்.எல்.ஏ.விற்கு கொரோனா.. மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் தனிமை..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் தொகுதி எம்.எல்.ஏ. அதுல் கார்க், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சீவ் பல்யான். கடந்த சில தினங்களுக்கு முன்பு காசியாபாத் எம்.எல்.ஏ. கார்க் வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தற்போது எம்.எல்.ஏ. கார்க்விற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மத்தியஅமைச்சர் சஞ்சீவ் பல்யான் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.