அசாமில் ஒரே நாளில் எம்.பி., எம்.எல்.ஏ. என இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி!

அசாம் மாநில பாஜக எம்.பி. திலீப் சாய்கியா, மற்றும் ஏஜிபி கட்சியின் எம்.எல்.ஏ. பிருந்தாபன் கோஸ்வாமி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 78,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்து வரும் நிலையில், இதற்கு பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அசாம் மாநில பாஜக எம்.பி. திலீப் சாய்கியா, மற்றும் ஏஜிபி கட்சியின் எம்.எல்.ஏ. பிருந்தாபன் கோஸ்வாமி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பாஜக எம்.பி. திலீப் சாய்கியா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
I have tested positive for COVID19 today at GMCH.
I request the people who came in contact with me in the last week, to please self isolate and get tested for COVID-19.
— Dilip Saikia MP (@DilipSaikia4Bjp) September 3, 2020