ஒடிசாவில் பெண் எம்.பிக்கு கொரோனா..!
ஒடிசா மாநில பெண் எம்.பி மஞ்சுலதா மண்டல் ( 44) பாத்ரக் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட பதிவில், “கொரோனா ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்தேன், முடிவில் கொரோனா தொற்று உறுதியானது. எனது உடல்நலம் நன்றாக உள்ளது. நான் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்.
கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட நீங்கள் அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி உங்கள் பரிசோதனையை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.