எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா.!
இரவு பகலாக எல்லை பகுதியில் நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
கொரோனாவால் பல்வேறு விதமாக பாத்திப்பு சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பதிப்பில் இருந்து மக்களை காக்க போராடும், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், காவல்துறை போன்றவர்களை கொரோனா தொற்று பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை இந்த கொடிய வைரசால் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இரவு பகலாக எல்லை பகுதியில் நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
ஏற்கனவே, சுமார் 250க்கும் மேற்பட்ட பி.எஸ்.எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 13 பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் திரிபுரா, கொல்கத்தாவில் தலா ஒருவர், டெல்லியில் 11 பேர் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் இதுவரை 78,055 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,551 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.