அகிலேஷ் யாதவுக்கு கொரோனா..!
அகிலேஷ் யாதவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்த கொரோனா வைரசால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோயின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கடந்த பல நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. பின்னர் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் அறிக்கையில் கொரோனா பாசிட்டிவ் என்று தெரிவிக்கப்பட்டது. தொற்று உறுதியானதால் அகிலேஷ் யாதவ் தனிமைப்படுத்தி கொள்வதாகக் ட்விட் செய்துள்ளார்.
अभी-अभी मेरी कोरोना टेस्ट की रिपोर्ट पॉज़िटिव आई है। मैंने अपने आपको सबसे अलग कर लिया है व घर पर ही उपचार शुरू हो गया है।
पिछले कुछ दिनों में जो लोग मेरे संपर्क में आये हैं, उन सबसे विनम्र आग्रह है कि वो भी जाँच करा लें। उन सभी से कुछ दिनों तक आइसोलेशन में रहने की विनती भी है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 14, 2021
அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் எனது கொரோனா சோதனை அறிக்கை சாதகமாக வந்துள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.