கர்நாடகாவில் இன்று 9,217 பேருக்கு கொரோனா..7021 பேர் டிஸ்சார்ஜ்.!
கர்நாடகாவில் இன்று 9,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2 வாரமாக 9-ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில், இன்று 9,217 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,30,947 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். அந்த வகையில், இன்று ஒரே நாளில் 7021 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,22,454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் 1,01,537 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 129 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,937 ஆக உயர்ந்துள்ளது.