திருமணமாகி 4 நாளில் மணமகன் உயிரிழந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில், மணமகள் உட்பட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபிரோசாபாத் எனும் மாவட்டத்தில், 10 நாட்களுக்கு முன்பதாக திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் முடிந்து 4 நாட்கள் கூடாத ஆகாத நிலையில், மணமகன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்ததற்கான காரணம் தெரியாமல் குடும்பத்தினர் திகைத்து உள்ளனர். இந்நிலையில், மணமகளின் அறிவுறுத்தலின் பெயரில் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது மணமகள், உயிரிழந்த மணமகனின் தாயார், சகோதரி உட்பட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று இருந்ததால் தான் மணமகன் உயிரிழந்திருப்பாரோ எனும் சந்தேகத்தில் அந்த கிராமத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…