திருப்பதி கோவிலில் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் உயிரிழப்பு.!

Default Image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஜூன் 11 முதல் ஆந்திராவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 12,000க்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். அந்த வகையில் கோவில் அர்ச்சகர் முதல் கோவில் ஊழியர்கள் உட்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கூறிய திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி அனில்குமார் கூறியதாவது, மொத்தமாக 402 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும், 3 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளதாகவும், 338 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கோவில் திறக்கப்பட்டதிலிருந்து 743பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிற்ப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், விஜிலென்ஸ் துறை, துப்பரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளதாகவும், இதுவரை பக்தர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
Guindy Govt hospital - Tamilnadu CM MK Stalin
Anbumani Ramadoss
kalaignar centenary hospital
Raj
Congress MP Rahul Gandhi - Priiyanka Gandhi
trump - musk - vivek