இங்கிலாந்திலிருந்து தெலுங்கானாவிற்கு திரும்பிய 7 பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் இருந்து தெலுங்கானா திரும்பிய ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அந்த நபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சி.எஸ்.ஐ.ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஏழுபேருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று புதிய பரிமாற்றம் அடைந்துள்ள வைரஸ் தான் காரணமா என கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இங்கிலாந்தில் இருந்து தெலுங்கானாவுக்கு திரும்பிய 846 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.