முதல்வர் எடியூரப்பா அலுவலகத்தில் 6 ஊழியர்களுக்கு கொரோனா
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது உடல் நிலை சீராக இருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார்.
நேற்று முதல்வர் எடியூரப்பா மகள் பத்மாவதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.