கான்பூர் அரசு காப்பகத்திலுள்ள கருவுற்ற 5 பேர் உட்பட 57சிறுமிகளுக்கு கொரோனா.!

Default Image

உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் அரசு காப்பகத்திலுள்ள 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேர் கருவுற்றுள்ளதாக கூறப்படுகிறது .

 உத்திரம் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் அரசு நடத்தி வரும் காப்பகத்தில் ஆதரவற்ற சிறுமிகள் உட்பட பல பெண்கள் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 5 பேர் கருத்தரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.அந்த 5 பேரில் இருவர் சிறுமிகள் மற்றும் அதில் ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது . இவர்கள் யாவரும் குழந்தைகள் நல கமிட்டியின் உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், 5 பெண்களும் காப்பகத்திற்கு வருவதற்கு முன்பே கருத்தரித்து இருந்ததாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரம்மதேவ் தெரிவித்துள்ளார்.

தற்போது கான்பூரில் ஸ்வரூப் நகரில் உள்ள அந்த காப்பகம் சீல் வைக்கப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கருத்தரித்த 5 பெண்களில் 3 பேர் ராமா மருத்துவ கல்லூரியிலும், இருவர் ஹாலெட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்