கர்நாடகத்தில் 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா..!
கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொற்று பாதித்த குழந்தைகளில் 88 பேர் 0 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 305 பேர் 10 முதல் 19 வயதுக்கு உப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் கடந்த 5 நாட்களில் மட்டும் 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா பாதிப்பு வரும் வாரங்களில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோர்கள் குழந்தைகளை மக்கள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கர்நாடகத்தில் நாள் ஒன்றுக்கு 1500 பேர் பாதிக்கப்படுகின்றனர்.