கேரளாவில் ஒரே நாளில் 435 பேருக்கு கொரோனா.!
இன்று ஒரே நாளில் கேரளாவில் 435 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் 435 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 7,874 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அங்கு மருத்துவமனையில் 3,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,097 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.