திரிபுரா முதல் மந்திரியின் குடும்பத்தில் உள்ள இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தன்னை தானே வீட்டில் மந்திரி பிப்லாப் தனிமைப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திரிபுரா முதல் மந்திரியான பிப்லாப் தேப் குடும்பத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து பிப்லாப் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய பிப்லாப், எனது குடும்பத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். எனக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…