குறையும் கொரோனா.. மகாராஷ்டிராவில் மேலும் 12,134 பேருக்கு கொரோனா!
மகாராஷ்டிராவில் மேலும் 12,134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அதிகம் பாதித்த மாநிலமான மஹாராஷ்டிராவில் தற்பொழுது குறையத் தொடங்கியது. அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் 12,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,06,018 ஆக உயர்ந்தது. மேலும், அம்மாநிலத்தில் கொரோனாவால் இன்று 302 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39,732 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு 17,323 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,29,339 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 2,36,491 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.