தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 1,041 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 1.27 லட்சத்தை கடந்தது!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,27,364 ஆக அதிகரித்தது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,415 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,09,065 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,745 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 14,554 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.