இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 45 ஆயிரமாக அதிகரிப்பு – உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் புதியதாக பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டு தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 8,773,243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 129,225 பேர் உயிரிழந்துள்ளனர், 8,161,467 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர 482,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 45,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 539 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.