வங்கிக் கடன் வட்டியும் குறையும்! மாதத்தவணையும் குறையும்! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமால் இருக்கின்றனர். நம் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நம்நாட்டில் பெரும் பொருளாதார மந்த நிலை உருவாகும் நிலை உண்டாகியுள்ளது.
வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்கோ வட்டி விகிதம் 5.15 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ரிவர்ஸ் ரெப்கோ வட்டி விகிதம் 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வீட்டு கடன், வாகன கடன் போன்றவைகளுக்கு கடன்வட்டி குறைய வாய்ப்புள்ளதாகவும், இதனால், மாத தவணைகள் குறையும் வாய்ப்புள்ளது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் டெல்லியில் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.