கொரோனா எதிரொலி ! வீழ்ச்சியை சந்திக்க உள்ள உலக நாடுகள் -இந்தியாவின் நிலை என்ன?
கொரோனா காரணமாக 1930-ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.இதனை சர்வதேச நிதியம் உறுதி செய்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-ஆம் ஆண்டில் 1.9 % இருக்கும் என்று சர்வதேச நிதியம் அறிவித்துள்ளது.1930-ஆம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் வளரும் நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சியே அதிகமாக இருக்கும் என்றும் 2020-ஆம் ஆண்டில் இந்தியாவும்,சீனாவும் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 13 % வீழ்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி பிரான்ஸ்,இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் பொருளாதர வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.