கொரோனா எதிரொலி! ஸொமேட்டோ நிறுவனத்தின் அதிரடி சேவை!
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஸொமேட்டோ நிறுவனம் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஆர்டர் செய்த உணவை வீடுகளுக்கு வழங்க வரும் ஸொமேட்டோ பணியாளர் வாடிக்கையாளரை தொடாமல் வீட்டிற்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள மேஜை அல்லது சுத்தமான இடத்தில் உணவை வைத்து விட்டு, அதனை புகைப்படம் எடுத்து வாடிக்கையாளருக்கு அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.