இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவு சின்னங்களை மே 15 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு வருட காலமாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் வீரியம் அண்மையில் குறைந்து வந்த நிலையில், தற்பொழுது இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 2,00,739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்தியா முழுவதிலும் மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக தொல்லியல் துறையின் கீழ் செயல்படக்கூடிய அனைத்து அருங்காட்சியகம் மற்றும் நினைவு சின்னங்களை மே 15 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் அவர்கள், கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வருகின்ற மே 15 அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொல்லியல் துறையின் கீழ் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…