கொரோனா எதிரொலி – பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தம்..!
கொரோனா பரவல் எதிரொலியாக, ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் எதிரொலியாக, ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தப்படுவதாக மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்குமென்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.