கொரோனா எதிரொலி: 20 ரூபாய்க்கு உணவு வழங்கி, ரூ.20,000 கோடியில் சிறப்பு திட்டங்கள்..அசத்திய கேரளா அரசு.!

Default Image

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால், மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைககள் எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் கேரளா 2ம் இடத்தில் உள்ளது. கேரளாவில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் ரூ.2,000 கோடி வறுமை ஒழிப்பு திட்டமான குடும்பஸ்ரீ மூலம் கடன் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 2 மாதத்திற்கான நலத்திட்ட ஓய்வூதியத்தை இந்த மாதமே வழங்க வேண்டும் என்று அறிவித்தார். நலத்திட்டம் ஓய்வூதியம் பெற தகுதியில்லாத குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க, ரூ.1,320 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும்  தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்க ரூ.100 கோடியும், ரூ.20 குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக ரூ.50 கோடியம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.பின்னர் சுமார் ரூ.14,000 கோடி கடன் நிலுவையை மாநில அரசு ஏப்ரல் மாதத்திற்குள் கட்டிமுடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்