மத்திய பிரதேசத்தில் கொரோனா எதிரொலி 10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு
மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2 வைத்து அலை ருத்திர தாண்டவம் ஆடி வருகிறது.அதில் மத்திய பிரதேசத்தில் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.நேற்று ஒரு நாளில் மட்டும் 8,998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனவால் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.எம்.பி. போர்டு தேர்வுகளுக்கு எதிராக மாணவர்களும் பெற்றோர்களும் குரல் எழுப்பிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தொழிற்கல்வி / முன்பள்ளி கல்வியில் டிப்ளோமா, எச்.ஆர்.டி.எம் நடத்திய பத்திரிகை துறைக்கான உடல் பயிற்சி தேர்வுகள் 1 மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அதற்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 13 வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எம்.பி அரசு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது என்று மாநில பள்ளி கல்வி அமைச்சர் இந்தார் சிங் பர்மர் தெரிவித்தார்.