உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டுள்ள துறையாக இருப்பது விமான போக்குவரத்து துறைதான். உள்ளூர் மற்றும் வெளிநாடு சேவை அனைத்தும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
விமானத்துறை இயங்காமல் இருப்பதால் இத்தறையில் உள்ள ஊழியர்களுக்கு சம்பளக்குறைப்பு மற்றும் பணிநீக்கம், போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள இண்டிகோ விமான நிறுவனம் தனது ஊழியர்களில் 10% பேரை நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இண்டிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில், கொரோனா காலத்திலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத ஊதியத்தை உலகளவில் வழங்கிய நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்று. நிலையான செலவுகள் விமான நிறுவனங்களுக்கு 40 சதவீதம் வரை அதிகம் என்றும், ஊரடங்கு போது இண்டிகோ ஒரு நாளைக்கு ரூ .40 கோடி செலவழிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தனது பணியாளர்களிடமிருந்து ஊதியத்தை குறைத்திருந்தாலும், வருவாயின் வீழ்ச்சியை ஈடுசெய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் அவர் கூறினார். மார்ச் 2019 நிலவரப்படி, இண்டிகோவில் 23,531 ஊழியர்கள் இருந்தனர். இண்டிகோவைத் தவிர, ஏர் இந்தியா, விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஏர் உள்ளிட்ட அனைத்து நிறுவங்களும் செலவுகளைக் குறைக்க இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…
சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி…