கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பு.!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 60 வயதான மருத்துவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நெல்லூரில் சிகிச்சை அளித்து வந்தார். இதையடுத்து சிகிக்சை அளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.
பின்னர் இவரின் இவருக்கு கொரோனா நோயின் தீவிரம் அதிகரித்ததால் 10 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த மருத்துவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உடல் அம்பத்தூர் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த மருத்துவரின் மனைவியும் , மருத்துவரின் டிரைவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு நெல்லூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.